சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய சில சாதனைகள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
-mdl.jpg)
இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான் பேட்டரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார். முன்னதாக பிசிசிஐ அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் படியும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியான நிலையில், இன்று அவருடைய ஓய்வு முடிவானது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது தலைமையின் கீழ் இந்திய டெஸ்ட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் புதிய உச்சங்களை எட்டியதுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்தது என்பதை எவறாலும் மறுக்க முடியாது. அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய கேப்டனாக அதிக ரன்கள்
டெஸ்ட் போட்டியில் நீண்ட காலமாக இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி, 113 இன்னிங்ஸ்களில் 5,864 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒரு இந்திய கேப்டனாக, டெஸ்ட் வடிவத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளர். இது மட்டுமல்லாமல், விராட் ஒரு கேப்டனாக 5000 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தாலும், மறுபுறம், வேறு எந்த கேப்டனும் 4000 ரன்களை கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 96 இன்னிங்ஸ்களில் 3454 ரன்கள் எடுத்துள்ளார்.
சேனா (SENA) நாடுகளில் கேப்டனாக அதிக வெற்றிகள்
டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நம்பர்-1 கேப்டனாக விராட் கோலி இருந்தார். அவரது தலைமையிலான, இந்திய அணி சேனா நாடுகள் என்றழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் என 7 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் மகேந்திர சிங் தோனி உள்ளார், அவரது தலைமையில் இந்திய அணி சேனா நாடுகளில் 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டை சதங்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 இரட்டை சதங்களை அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக் இரட்டை சதங்களை அடித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் தலா 6 முறை இரட்டை சதங்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
இந்திய டெஸ்ட் கேப்டனாக அதிக வெற்றிகள்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி 68 போட்டிகளில் செயல்பட்டுள்ள நிலையில் அதில் அவர் 40 போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளைப் பதிவுசெய்த வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். இந்த பட்டியலின் இரண்டாம் இடத்தில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 60 போட்டிகளில் அணியை வழிநடத்தில் அதில் 27 வெற்றிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஒரு கேப்டனாக அதிக ஆட்டநாயகன் விருதுகள்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற கேப்டன் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ஆவர் இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள நிலையில் அதில் 7 முறை ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 34 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 4 முறை ஆட்டநாயகன் விருதை வென்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
கேப்டனாக அதிக டெஸ்ட் சதங்கள்
Also Read: LIVE Cricket Score
இது மட்டுமல்லாமல், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டனாக அதிக சதங்களை அடித்த வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அவர் 113 இன்னிங்ஸில் 20 சதங்களை அடித்துள்ளார் என்பாது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கள் 74 இன்னிங்ஸ்களில் 11 சதங்களை அடித்து பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now