
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணியில் தன்ஸித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் உள்ளிட்டோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் சௌமீயா சர்க்கார் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் இணை அபாரமாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.
இதில் மெஹிதி ஹசன் 77 ரன்களையும், சௌமீயா சர்க்கார் 73 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மஹ்முதுல்லா 84 ரன்னும், ஜக்கார் அலி 62 ரன்னும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங், அலிக் அதனாஸ், கேப்டன் ஷாய் ஹோப் உள்ளிட்டோர் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த கேசி கார்டி, அமீர் ஜாங்கு இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேசி கார்டி 95 ரன்னில் ஆட்டமிழந்தார்.