
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிலிண்டாஃப். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பிளின்டாஃப் இங்கிலாந்து அணிக்காக கடந்த 1998ஆம் ஆண்டு அறிமுகமாக 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 26 அரைசதங்களுடன் 3845 ரன்களையும், 226 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதேசமயம் ஒருநாள் கிரிக்கெட்டில் 141 போட்டிகளில் விளையாடி 3 சதம், 18 அரைசதங்கள் என 3394 ரன்களையும், 169 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
மேற்கொண்டு 7 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஃபிளிண்டாஃப் 76 ரன்களையும் 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். ஆனால் டிசம்பர் 2022 இல் டாப் கியர் ஷோவின் படப்பிடிப்பின் போது பயங்கரமான கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த பிறகு, ஆண்கள் அணியின் நிர்வாக இயக்குனர் ராப் கீயின் ஆதரவுடன் பிளின்டாஃப் கிரிக்கெட் அணிக்கு திரும்பினார்.
அப்போதிருந்து, அவர் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக பணியாற்றி வந்தார். அதனைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலனது அணியின் துணை பயிற்சியாளராகவும் ஃபிளின்டாஃப் செயல்பட்டு வந்தார். மேலும் லயன்ஸ் மற்றும் அண்ட்ர்19 அணிகளுடனும் பணிபுரிந்துள்ளார், மேலும் நடப்பாண்டு தி ஹன்ட்ரட் கிரிக்கெட்டில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.