
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான யான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது . நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்றாம் நாளை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இந்த டெஸ்ட் போட்டிகளின் தோல்வியால் ஆஸ்திரேலியா அணியின் மீதான விமர்சனங்கள் வலுத்து வருகின்றன . முன்னாள் வீரர்கள் பலரும் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சி மற்றும் இந்த தொடருக்கான தயாரிப்புகளை குறை கூறிவரும் நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மேக்டொனால்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பின் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார் .
இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் இனிவரும் டெஸ்ட் போட்டிகளிலும் எங்களது பயிற்சி முறைகளை மாற்றப் போவதில்லை . நாங்கள் இந்தியாவில் வந்து இறங்கி பெங்களூரில் பயிற்சியை தொடங்கியதில் இருந்தே சரியான முறையில் தான் பயணிக்கிறோம் . எல்லா வீரர்களும் போட்டிக்கு நன்றாகவே தயாராக இருக்கிறார்கள் . நாங்கள் பயிற்சி முறையில் எந்தவித மாற்றங்களையும் செய்யப்போவதில்லை.