
கே எல் ராகுல் இந்திய அணிக்காக இதுவரை 7 ஒரு நாள் போட்டி மூன்று டெஸ்ட் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். கே எல் ராகுல் தான் அடுத்த கேப்டனாக ரோஹுத் சர்மாவுக்கு பின் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் பட்டத்தை வென்றதன் மூலம் அனைத்தையும் மாற்றிவிட்டார் .
இந்த நிலையில் லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி ஃபிளவர் அளித்துள்ள பேட்டியில், “கே எல் ராகுல் சிறந்த கேப்டன். அவர் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் .தொடர்ந்து பேசிய அவர் கே எல் ராகுலுக்கு பேட்டிங்கில் இல்லாத திறமையே கிடையாது. அவர் அணியை சிறப்பாக தலைமை தாங்க கூடியவர். அவர் பேட்டிங் விளையாடும்போது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.
நான் கே எல் ராகுலை இன்று அல்ல நான் இங்கிலாந்து ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது கே எல் ராகுல் இந்திய ஏ அணிக்காக திருவனந்தபுரத்தில் விளையாடினார்.நான் அப்போதியில் இருந்து கே எல் ராகுலை பார்த்து வருகிறேன். ராகுல் ஒரு இளம் வீரர் ஒரு நல்ல தலைவன். எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பார். அவர் கூட இருந்தால் நமக்கு நல்ல துணையாக இருக்கும். அவரை நான் வெகுவாக மதிக்கின்றேன். அவருடன் பணியாற்றுவதை நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.