பும்ரா தன்னிடம் பந்தை கொடுங்கள் என பெற்று, அணி வெற்றிக்கு உதவினார் - விராட் கோலி
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது குறித்து கேப்டன் விராட் கோலி சக வீரர்களை புகழ்ந்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி தாங்கள் பெற்ற இந்த வெற்றி குறித்து போட்டி முடிந்து பேட்டியளித்திருந்தார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம். இங்கிலாந்திற்கு நாங்கள் வந்தது தோல்வியில் இருந்து தப்பிப்பதற்கு அன்று, வெற்றி பெறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
அதன்படி ஒரு அணியாக இந்த வெற்றியை பெற்றதில் பெருமை கொள்கிறோம். ஆடுகளம் பிளாட்டாக இருந்தது. அதன் பிறகு பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனதும் பவுலர்கள் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். நிச்சயம் இறுதி நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது.
பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனதும் பும்ரா என்னிடம் வந்து பந்தை என்னிடம் கொடுங்கள் இனி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி பந்துவீசும் வாய்ப்பை கேட்டுப் பெற்றார். பிறகு அவர் எடுத்த அந்த இரண்டு விக்கெட்தான் போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ரோகித் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்து இருந்தனர்.
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
எங்களது இந்த வெற்றி அனைவரின் வெற்றி ஆகும். மேலும் இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இதனை அப்படியே இறுதிப் போட்டியிலும் செயல்படுத்தி வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now