ஆஸிக்கு மேலும் ஒரு அடி; நாடு திரும்பும் ஆஷ்டன் அகர்!
ஆஸ்திரேலியச் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர், உள்ளூர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியாவிலிருந்து உடனடியாகத் தனது நாட்டுக்குத் திரும்பவுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட், இந்தூரில் மார்ச் 1 அன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2அஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.
Trending
டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர், இதுவரை நடைபெற்ற இரு டெஸ்டுகளிலும் விளையாடவில்லை. இந்நிலையில் காயம் போன்ற காரணங்களுக்காக அல்லாமல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து உடனடியாக தனது நாட்டுக்குத் திரும்பவுள்ளார் அகர்.
எனினும் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரில் அவர் இடம்பெறவுள்ளார். ஏற்கெனவே காயம் காரணமாக வார்னர், ஹேசில்வுட் மற்றும் சொந்தக் காரணங்களுக்காக கேப்டன் கம்மின்ஸ் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியுள்ளார்கள்.
தனக்கு முதல் குழந்தை பிறப்பதையொட்டி 2ஆவது டெஸ்டுக்கு முன்பு நாடு திரும்பினார் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன். இதனிடையே, தற்போது 3-வது டெஸ்ட் தொடங்கும் முன்பு கம்மின்ஸும் ஸ்வெப்சனும் இந்தியாவுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now