
இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் கடந்த மார்ச் 13ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அகமதாபாத் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது . இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது .
தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை தற்போது அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வீரர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். குறிப்பாக விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தர வரிசையில் முன்னேறி இருக்கின்றனர் .
நீண்ட காலமாக ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் வைத்து வந்த இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி கடந்த இரண்டு வருடங்களாக டெஸ்ட் போட்டியில் ரன் குவிக்காததால் ஜூலை மாதம் முதல் டாப் 10 தரவரிசையில் இருந்து கீழ் இறங்கினார். விராட் கோலி அவுட் ஆப் ஃபார்மில் இருந்த காலகட்டங்களில் அவரது தரவரிசை பின்னோக்கி சென்று கொண்டே இருந்தது.