Advertisement

நாங்கள் முழுவதுமாக சோதிக்கப்பட்டோம் - கேஎல் ராகுல்!

நாங்கள் நூறு ஓவர் விளையாடவில்லை, ஆனால் நாங்கள் களத்தில் இருந்த ஒவ்வொரு ஓவரும் உடல் ரீதியாக சோதிக்கப்பட்டோம் என்று இந்திய வீரர் கேஎல் ராகுக் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 13, 2023 • 14:08 PM
நாங்கள் முழுவதுமாக சோதிக்கப்பட்டோம் - கேஎல் ராகுல்!
நாங்கள் முழுவதுமாக சோதிக்கப்பட்டோம் - கேஎல் ராகுல்! (Image Source: Google)
Advertisement

இந்திய அணிக்கு திடீரென்று எல்லா விஷயங்களும் மிக நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இந்திய அணிக்கு பெரிய பிரச்சினையாக இருந்ததே, அணி நிர்வாகம் எடுக்கக்கூடிய முடிவுகள் தொடர்ச்சியாகத் தவறாகச் சென்றதுதான். திறமையான வீரர்கள் அணியில் இருந்த பொழுதும், பரிசோதனை முயற்சிகள் நல்ல முடிவுகளை தராத காரணத்தினால், அணியின் நம்பிக்கை வெகுவாக குறைந்திருந்தது. 

இந்திய அணி நம்பிக்கை மற்றும் ஊக்கம் பெறுவதற்கு ஏதாவது ஒன்று தேவைப்பட்டது. நடப்பு ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது சுற்றுப்போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்திய அணிக்கு என்ன தேவையோ? அதை இரு மடங்கு கொடுத்திருக்கிறது. மிகக்குறிப்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டரில் காயத்தில் இருந்து திரும்பி வந்த கேஎல்.ராகுல் எப்படி விளையாடுவார்? அவருடைய உடல் தகுதி எப்படி இருக்கிறது? இன்று அவர் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் இருந்தது.

Trending


கேஎல் ராகுல் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து, மேலும் விக்கெட் கீப்பிங் செய்து முற்றுப்புள்ளி வைத்தார். இது மட்டும் இல்லாமல், அவர் அடுத்த நாளே இலங்கைக்கு எதிரான போட்டியில் மிக முக்கியமான 39 ரன்கள் எடுத்தார். மேலும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டதோடு, குல்தீப் யாதவுக்கு சரியான ஆலோசனை கூறி, சதிரா விக்கெட்டை கைப்பற்ற உதவி செய்தார்.

இந்திய அணி வென்ற பிறகு பேசிய கேஎல்ராகுல், “இது ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் முழுவதுமாக சோதிக்கப்பட்டோம். நாங்கள் நூறு ஓவர் விளையாடவில்லை, ஆனால் நாங்கள் களத்தில் இருந்த ஒவ்வொரு ஓவரும் உடல் ரீதியாக சோதிக்கப்பட்டோம். இன்று நாங்கள் திரும்பி எங்களால் முடிந்ததை செய்து பார்த்ததில் மகிழ்ச்சி. ஒரு அணியாக எங்களுக்கு இது நல்ல டிக் மார்க்.

நான் அணிக்கு பங்களிக்கும் போது எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பேன். மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும்பொழுது எப்பொழுதும் பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது முக்கியம். நான் நான்கைந்து மாதங்களாக வெளியே இருந்தேன். இதனால் கிடைப்பதை எடுத்துக் கொள்வேன். அது இஷான் கிஷான் உடன் ஒரு பார்ட்னர்ஷிப் கிடைத்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒரே மைதானத்தில் விளையாடினோம். 

ஆனால் இந்த முறை கொஞ்சம் பந்து சுழலும் ஆடுகளத்தில் விளையாடினோம். ஆனால் நாங்கள் அதை நன்றாகவே சமாளித்தோம். நாங்கள் 20, 30 ரன்கள் குறைவாக இருந்தோம். இன்னும் சில பாட்னர்ஷிப் மூலமாக 230, 240 ரன்கள் சென்று இருக்கலாம். நீங்கள் ஸ்டம்புக்கு பின்னால் இருக்கும் பொழுது, பேட்டர் என்ன செய்கிறார் என்று உங்களுக்கு நல்ல யோசனை இருக்கும். இதனால் நான் குல்தீபுக்கு ஒரு யோசனை சொன்னேன். அது நன்றாகவும் வேலை செய்தது” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement