
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் காவஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 9ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டத்தில் ஆஸ்திரேலியா அணி அசைக்க முடியாத முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய அணி அடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த இரு அணிகளும் இந்தியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவிருக்கின்றன. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி குறைந்தது மூன்று போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தங்களுக்கு இந்தியாவில் பயிற்சி ஆட்டங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டது. மேலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை ஆஸ்திரேலியாவில் அமைத்து, இந்திய தொடருக்கு வரவிருக்கும் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை அந்த மைதானத்தில் போட்டி தந்து விளையாட வைத்திருக்கிறது. மேலும் இங்கு வரும் ஆஸ்திரேலியா அணிக்கு பெங்களூரில் உள்ள ஆலூர் மைதானத்தில் பயிற்சிகளை ஏற்பாடும் செய்திருக்கிறது.