
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. அதேசமயம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே (நான்காவது) டெஸ்ட் போட்டியானது நாளை (டிசம்பர் 26) மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளது. மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கு இப்போட்டில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.
அதிலும் இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் வென்றால் மட்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற அழுத்ததிற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டிக்காக இரு நி வீரர்களும் திவீரமாக தயாராகியும் வருகின்றன்ர். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.