IND vs AUS: புதிய சர்ச்சையை கிளப்பிய விதர்பா கிரிக்கெட் சங்கம்!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நாக்பூர் மைதானத்தில் இன்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில், அந்த மைதானத்தில் தண்ணீரை தெளித்த விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா வெறும் 91 ரன்களில் மடிந்தது. முதல் இன்னிங்சில் ஜடேஜா 5 விக்கெட்டுகளைச் சாய்க்க, 2ஆவது இன்னிங்சில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளி பகுதியை பயன்படுத்தி அஸ்வின் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இந்நிலையில், எப்படியும் இதே நாக்பூர் போன்ற பிட்ச்தான் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் போடப்படும் என்று தெரிந்ததால் ஆஸ்திரேலியா இன்று நாக்பூரில் தங்கி அதே வலைப்பயிற்சி பிட்ச், மற்றும் டெஸ்ட் நடந்த பிட்சில் பயிற்சி செய்ய கோரிக்கை வைத்தனர். பிட்சை அப்படியே விட்டு விடுமாறும் ஒரு செஷன் அங்கு பயிற்சி செய்து கொள்கிறோம் என்றும் விதர்பா கிரிக்கெட் சங்கத்திடம் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
Trending
ஆனால் கோரிக்கையை ஏற்காமல் இரவோடு இரவாக பயிற்சி பிட்ச், ஆட்டம் நடந்த பிட்ச் இரண்டிலும் தண்ணீர் பாய்ச்சி பயிற்சி செய்வதற்கு லாயக்கில்லாமல் செய்து ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை படுமட்டமாக நிராகரித்துள்ளனர் விதர்பா கிரிக்கெட் சங்கத்தினர். அனைத்துப் பிட்ச்களிலும் தண்ணீர் பாய்ச்சப்பட்டதால் பயிற்சி ரத்து செய்யப்பட்டதை பெரும் பின்னடைவாகப் பார்க்கிறது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம்.
Win Big, Make Your Cricket Tales Now