
உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்க உதவும் ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. தொடரை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.
இதைதொடர்ந்து இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய அணியை அறிவித்துள்ளனர். தற்பொழுது இந்த உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் 10 அணிகளும் அதற்காக சிறந்த முறையில் தயாராவதற்கு மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
உலகக் கோப்பைக்கு முன்பாக எல்லா அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகின்றன. இந்நிலையில், இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்? என்று தன்னுடைய கணிப்பை ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ் வெளியிட்டு இருக்கிறார்.