
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்றுடன் முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடியேயான மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாமை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களைச மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 41 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 118 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோஸ் இங்கிலிஸ் 27 ரன்களையும், ஆதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 27 பந்துகளில் 61 ரன்களைக் குவித்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி 11.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.