
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாட முடிவுசெய்துள்ளது. இந்த தொடருக்கான தயாரிப்பைப் பொறுத்தவரை, இந்த முத்தரப்புத் தொடர் மூன்று அணிகளுக்கும் முக்கியமானது. அந்தவகையில் இந்த முத்தரப்பு தொடருக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
அதன்படி இத்தொடரில் இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 4 போட்டிகள் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசாம் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.