
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் ஒவ்வொரு அணியும் மற்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன், டி20 தொடர்களிலும் விளையாடி தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருவகின்றன.
அந்தவகையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயாயான இந்த தொடரானது அடுத்த மாதம் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் முதல் 3 போட்டிகள் சட்டோகிராமிலும், அடுத்த இரண்டு போட்டிகள் டாக்காவிலும் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் ரஸா தலைமையிலான இந்த இந்த டி20 அணியில் கிரேய்க் எர்வின், பிளசிங் முசரபானி, லுக் ஜோங்வா, ரியான் பார்ல், சீன் வில்லியம்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளார். மேலும் இந்த அணியில் இளம் வீரர்களான ஜொனதன் காம்ப்பெல், பிரையன் பென்னட் போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,