ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டது - பசித் அலி!
ரோஹித் சர்மா அணியின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்து விட்டதாகவும், அவ்ர் பதவியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டதாகவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியுள்ளார்.
கடந்த மாதம் நியூசிலாந்திற்கு எதிராக செந்த நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்த கேள்விகள் அதிகரித்து வருகிறது. மேற்கொண்டு தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரிலும் ரோஹித் தலைமையில் விளையாடிய மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டு தோல்வி, ஒரு டிராவை செய்துள்ளது.
மேற்கொண்டு கேப்டன்சியுடன், ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்மும் மோசமாக உள்ளது. இதன் காரணமாக அவர் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. ஏனெனில் ரோஹித் சர்மா கடைசி 11 இன்னிங்ஸ்களில் 122 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது என கிரிக்கெட் விமசகர்காள் அறிவுறுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலியும் ரோஹித்தை கண்டித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசியா பாசித் அலி, "முதல் டெஸ்டில் வென்ற பிறகு இந்தியா அதீத நம்பிக்கையுடன் இருக்கிறதா?. ஏனெனில் ரன்களை குவிக்க தடுமாறிய ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கியதனால், ரன்களை குவித்துக்கொண்டிருந்த கேஎல் ராகுலையும் அவர் அழுத்தத்திற்கு தள்ளிவிட்டார். இதன்மூலம் அவர் அணியின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்து விட்டார். ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
ஏனெனில் ரோஹித்தின் நிலைப்பாட்டினால், அவர் முழு அணியின் வரிசையையும் தொந்தரவு செய்துவள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்பட வேண்டும். நீங்கள் இந்தியாவுக்கு நிறைய சேவை செய்திருக்கிறீர்கள், ஆனால் இப்போது உங்கள் உடல் உங்களை ஆதரிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து பசித் அலியின் கருத்து தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் விவாதத்திற்கு வழி வகுத்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை 2-2 என்ற கணக்கில் சமன்செய்வதுடன், பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் தக்கவைக்கும். ஒருவேளை இப்போட்டியிலும் இந்திய அணி தோல்வியடையும் பட்சத்தில் ரோஹித் சர்மாவுக்கும் இது கடைசி டெஸ்ட் போட்டியாக அமையவும் வாய்ப்புள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now