
BCCI announces squad against Bangladesh for ODI, Test series (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இத்தொடர்களுக்கான இந்திய அணியின் கேப்டன்களாக ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் இந்த தொடருக்கு திரும்பியுள்ளனர்.
நியூசிலாந்து தொடரில் இடம்பிடித்திருந்த சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதே போன்று ருத்துராஜ், பிரித்வி ஷா ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை.