வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்!
நடப்பாண்டிற்கான பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
பிசிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டு தோரும் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை வழங்குவது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டிற்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏ+ கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ஊதியமாக ரூ.7 கோடி ரூபாயும், ஏ கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ.3 கோடியும், சி கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. ஒரு கோடி ரூபையையும் பிசிசிஐ ஊதியமாக வழங்கி வருகிறது. இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் ஏ பிளஸ் கிரேடில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Trending
இதையடுத்து ஏ கிரேடில், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சமி, முகமது சிராஜ் ,கே எல் ராகுல், ஷுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. பி கிரேடில், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் கடைசி பிரிவான சி கிரேடில் ரிங்கு சிங், திலக் வர்மா,ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஸ்னோய், ஜித்தேஷ் சர்மா, வாசிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பரத், பிரசீத் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ராஜத் பட்டித்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் பிசிசிஐ-யின் எச்சரிக்கையையும் மீறி ஐபிஎல் தொடருக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை பங்கேற்காமல் இருந்து வந்த நட்சத்திர வீரர்கள் இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அகியோரின் மத்திய ஒப்பந்தத்தை ரத்து செய்து பிசிசிஐ அதிரடி காட்டியுள்ளது. இதனால் அவர்கள் பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து விலக்கப்படுவதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவதும் கேள்விகுறியாக மாறியுள்ளது. முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் கிரேட் பி பட்டியலிலும், இஷான் கிஷான் கிராட் சி பட்டியலிலும் இடம்பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கூடுதலாக ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் மற்றும் வித்வத் கவேரப்பா ஆகியோருக்கு வேகப்பந்து வீச்சு ஒப்பந்தங்களையும் தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் குறைந்தபட்சம் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் அல்லது 10 டி20 போட்டிகளை விளையாடுவதற்கான அளவுகோல்களை சந்திக்கும் விளையாட்டு வீரர்கள், விகித அடிப்படையில் சி கிரேடில் தானாகவே சேர்க்கப்படுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டியில் அறிமுகமான சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல் ஆகியோர் 2 டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளனர். அவர்கள் வரும் மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் நடக்க இருக்கும் 5ஆவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று விளையாடினால், இருவரும் சி கிரேடில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2023/24 சீசனுக்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தங்களின் பட்டியல் (ஆடவர்)
- கிரேடு ஏ+ - ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா.
- கிரேடு ஏ - ஆர் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மான் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா.
- கிரேடு பி - சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
- கிரேடு சி - ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் மற்றும் ரஜத் படிதார்.
- வேகப்பந்து வீச்சு ஒப்பந்தப் பரிந்துரைகள் - ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் மற்றும் வித்வத் கவேரப்பா.
Win Big, Make Your Cricket Tales Now