
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு டெலி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
இந்நிலையில் அவர் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஹாரி புரூக், தேசிய அணியுடனான தனது கடமைகளுக்கு தயாராக வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டி இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். ஏனெனில் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் பதவிக்கான தேர்விலும் ஹாரிக் புரூக் உள்ளார்.