ரோஹித் சர்மாவை தேடி வரும் டி20 கேப்டன்ஷிப்; பிசிசிஐ தீவிர முயற்சி!
டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட வேண்டும் என ரோஹித் சர்மாவை பிசிசிஐ சமாதானப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் இந்திய டி20 அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால், அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் வரை ரோஹித் சர்மாவே கேப்டனாக செயல்பட வேண்டும் என பிசிசிஐ விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறிய பின்னர், சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடப் போவதில்லை என ரோகித் சர்மா அறிவித்திருந்தார்.
Trending
BCCI Wants Rohit Sharma To Lead India In T20Is!#INDvsAUS #SAvIND #India #T20WorldCup2024 #RohitSharma pic.twitter.com/csABSqcZPN
— CRICKETNMORE (@cricketnmore) November 29, 2023
அவரை மீண்டும் அணிக்கு கொண்டுவர பிசிசிஐ சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மாவுடன் பிசிசிஐ பேசியதற்கு பலன் கிடைத்ததா என்பது வீரர்களின் பட்டியலில் தெரியவரும் என்பதால், எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. ஒருவேளை ரோஹித் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் சூர்யகுமார் கேப்டனாக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now