
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியை இழந்துள்ள நிலையில், அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும்.
இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.