பார்டர் கவாஸ்கர் தொடர்: தொடரின் வெற்றியாளரை கணித்த ரிக்கி பாண்டிங்; பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி!
இம்முறையும் இந்திய அணியை ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதுடன், பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை ஹாட்ரிக் முறையாக கைப்பற்றும் என்று நினைக்கிறேன் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
Trending
மேலும் இப்போட்டிக்காக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளதால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற தனது கருத்தை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இத்தொடரில் எதாவது ஒரு போட்டி டிராவில் முடிவடையலாம், அல்லது மோசமான வானிலை காரணமாக போட்டியின் முடிவு மாறலாம் என்பதால், இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று நம்புகிறேன். ஆனாலும் இந்தியா வலுவான அணியை இங்கு கொண்டு வரும் என்று தெரியும். இருப்பினும் நாங்கள் தற்போது உலக டெஸ்ட் சாம்பியனாகவும் இருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரிக்கி பாண்டிங் கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இம்ம்முறை ஆஸ்திரேலியாவில் நடக்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது ஐந்து டெஸ்ட் போட்டிகளை கொண்டுள்ளது. எங்களது கடந்த இரண்டு சுற்றுப்பயணங்களிலும் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்ததை நினைவில் கொள்ளுங்கள், கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியா கை வைக்கவில்லை.
அதனால்தான், கடந்த ஐந்து முதல் எட்டு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதும் போட்டிக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். இது ஒரு தொடரின் ஒரு ஹெக் ஆக இருக்கும், மேலும் இந்தியா ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்ய எல்லா வாய்ப்புகளும் உள்ளது, ஏனெனில் நாங்கள் எங்களுக்கு பொருத்தமான பந்துவீச்சாளர்களை பெற்றுள்ளோம். அதேசமயம் அங்கு எக்கள் பேட்டர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், நாங்கள் மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வெல்லவும் முடியும்.
அதேசமயம் அடுத்தடுத்து தோல்விகளுக்கு ஆஸ்திரேலியா என்ன செய்ய விரும்பும் என்பதை நாங்கள் அறிவோம். மேலும் அவர் இம்முறை இத்தொடரை கைப்பற்றுவதற்கு முழு முயற்சியை எடுப்பார்கள். ஏனெனில் அவர் அடுத்தடுத்து தங்கள் சொந்த மண்ணில் இரண்டு தொடர்களை இழந்துள்ளனர். அதனால் நிச்சயம் இத்தொடரை வெல்ல அவர்கள் ஆக்ரோஷமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அவர்களிடம் வலிமை வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் இருப்பதுடன், நாதன் லையனும் இருப்பது கூடுதல் சாதகத்தை வழங்கலாம்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு vs இந்தியாவின் பேட்டர்களுக்கான போட்டியாக இருக்கும். அதேசமயம் இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதலும் அனைவரும் பார்க்க காத்திருக்கும் ஒன்றாக இருக்கும். இந்த தொடருக்கான அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் இம்முறையும் இந்திய அணியை ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதுடன், பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை ஹாட்ரிக் முறையாக கைப்பற்றும் என்று நினைக்கிறேன்” என்று தெவித்துள்ளார்ர்.
Win Big, Make Your Cricket Tales Now