சிட்னி டெஸ்டில் இருந்து விலகும் ரோஹித்; கேப்டன் பொறுப்பை ஏற்கும் பும்ரா!
சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளதாகவும், அவருக்கு பதில் ஷுப்மன் கில் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் அஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். மறுபக்கம் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டியில் இந்திய அணி சில மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இப்போட்டியில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. மறுபக்கம் ரிஷப் பந்தும் இப்போட்டியில் விளையாடுவார் என்பதும் சந்தேகம் தான். இதன் காரணமாக பிரஷித் கிருஷ்ணா மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் இடம்பிடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு இத்தொடரில் சோபிக்க தவறிய கேப்டன் ரோஹித் சர்மாவின் இடம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளது.
இந்நிலையில் சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளதாகவும், அவருக்கு பதில் ஷுப்மன் கில் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. நடப்பு டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா விளையாடிய 5 இன்னிங்ஸ்களில் அவர் ஒருமுறை கூட 10 ரன்களை தாண்டவில்லை.
Rohit Sharma is unlikely to play at the SCG!#CricketTwitter #AUSvIND #TeamIndia #RohitSharma pic.twitter.com/y1l4ngmHRJ
— CRICKETNMORE (@cricketnmore) January 2, 2025
இதனையடுத்து இப்போட்டிக்கு முன்னதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் வெற்றிக்கு தேவையான அணியை உருவாக்கும்படி கூறிய ரோஹித் சர்மா, தன்னை இப்போட்டியில் சேர்க்க வேண்டாம் என்றும் கூறியதாகவும், அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இனி ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, தனூஷ் கோட்டியான்.
Win Big, Make Your Cricket Tales Now