
Manchester Test: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொனட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரையிலும் மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் இங்கிலாந்து அணி இரண்டிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியது.
இதனையடுத்து இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இதிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.