
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டியிலும் வெற்றிபெற்றால், இந்திய அணி தொடரை வெல்வதுடன், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் இந்திய அணி முதலிடத்தை பிடித்துவிடும்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட்டில் காயமடைந்த ஜோஷ் ஹேசில்வுட், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தார். அவர் காயம் குணமடையாததால் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் காயம் காரணமாக அவர் விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னணி டெஸ்ட் பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட், 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 222 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.