
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் தொடரை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி முதலிரண்டு போட்டிகளில் படுதோல்வியை சந்தித்து தொடரை ஏறத்தாழ இழந்துள்ளது. அதிலும் இந்தியாவில் பயிற்சி ஆட்டத்தை மறுத்துவிட்ட ஆஸ்திரேலியா, இந்தியா வருவதற்கு முன்பு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை ஆஸ்திரேலியாவில் அமைத்து விளையாடி பின்பு இந்தியா வந்து, இந்திய நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் போல பந்து வீசும் இந்திய இளம் வீரர் ஒருவரை வைத்து பயிற்சி செய்ததென வித்தியாசமாக நடந்து கொண்டது.
ஆனால் தொடர் ஆரம்பித்த பின்பு எந்த விதமான முன்னேற்றமும் ஆஸ்திரேலியாவிடம் பார்க்க முடியவில்லை. மாறாக பேட்டிங் பெரிய அளவில் சரிந்து, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இந்திய அணியிடம் பரிதாபமாக தோற்று உள்ளது ஆஸ்திரேலியா அணி. இந்த நிலையில் வார்னர், ஹசில்வுட் , அகர் ஆகியோர் விளையாடாது ஆஸ்திரேலிய திரும்ப, கேப்டன் கம்மின்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்திரேலியா திரும்பி தற்போது வர முடியாத நிலையில் இருக்கிறார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு ஸ்மித் கேப்டன்சி செய்ய உள்ளார்.
இதுகுறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் இயான் ஹீலி, “கம்மின்ஸ் நீண்ட காலம் கேப்டன் பதவியை சுமந்து கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. அவர் ஒரு பந்துவீச்சாளராக முடிப்பதையே நான் விரும்புகிறேன். கேப்டன் பதவி ஒரு டர்ன் அவுட்டை உருவாக்குகிறது. அவருக்கு நான்கைந்து ஆண்டுகள் கேப்டன் பதவி என்பது நீண்டது ஆகும்.