
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஷ்ரேயஸ் ஐயர். தற்போது ஆஸி. அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூரில் தேசிய கிரிக்கெட் அகாதமியில் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்ற பிறகே அவரால் இந்திய அணியினருடன் மீண்டும் இணைய முடியும் என தெரிவிக்கப்பட்டது.
அதனால் ஸ்ரேயஸ் ஐயர் விளையாடாத நிலையில் சூர்யகுமார் யாதவ் அவருக்கு பதிலாக அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது, பிப்ரவரி 17 முதல் டெல்லியில் தொடங்கவுள்ள 2ஆவது டெஸ்டில் ஸ்ரேயஸ் ஐயர் இடம்பெறுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.