
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இரண்டிலும் ஆஸ்திரேலியா அணி படுதோல்வியை சந்தித்து தொடரில் பின்தங்கியுள்ளது.
கடைசி இரண்டு போட்டிகள் அகமதாபாத் மற்றும் இந்துர் மைதானங்களில் நடைபெறுகிறது. இந்தூர் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதியும், அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் நான்காம் டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதியும் துவங்குகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவுற்றவுடன் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். ஓரிரு தினங்களில் அணிக்கு திரும்பி வந்துவிடுவார் என்று ஆஸ்திரேலிய அணியின் தரப்பில் இருந்து தகவல்கள் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வரை அவர் வரவில்லை.