ஆரோன் ஃபிஞ்ச் காயம்; ஆஸி.யை வழிநடத்துவது யார்?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் காயமடைந்தார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி ஐந்து டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தோடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜூலை 20ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியின் போது, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்சிற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஒருவேளை ஆரோன் ஃபிஞ்ச் தொடரிலிருந்து விலகும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற சந்தேகமும் ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வேல், கம்மின் உள்ளிட்டோர் ஏற்கெனவே இத்தொடரிலிருந்து விலகியுள்ளதால், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பு குறித்து விவாதமும் நடந்து வருகின்றன.
அதன்படி ஃபிஞ்ச் ஓய்விலிருக்கும் சயமத்தில் அணியை வழிநடத்தும் பொறுப்பு மேத்யூ வேட்டிடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் முன்னதாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திய அனுபவம் பெற்றவர்.
அப்படி இல்லையேன்றால் அனுபவ வீரர் மிட்செல் ஸ்டார்க் அல்லது ஹென்ரிக்ஸ் ஆகியோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற கருத்துகளும் ஆங்காங்கே எழுந்து வருகின்றன.
Win Big, Make Your Cricket Tales Now