
இந்திய அணிக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. டெல்லியில் நடந்த 2ஆவது டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா, அஸ்வின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத ஆஸ்திரேலிய அணி சுருண்டதால் 3 நாட்களில் போட்டிமுடிந்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வெளியான தகவலின் படி, “பாட் கம்மின்ஸ் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்படுகிறார். அவரின் குடும்பத்தினருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், உடனடியாக கம்மின்ஸ் ஆஸ்திரேலியா புறப்படுகிறார். 2 அல்லது 3 நாட்களில் இந்தியா திரும்பிவிடுவார் என்று ஆஸ்திரேலிய அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.