
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (மார்ச் 9) நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய சிறந்த லெவனை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த அணியில் ஐந்து இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி, இந்த அணியின் தொடக்க வீரர்களாக நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர்த்து மூன்றாம் வரிசையில் விராட் கோலியும், நான்காம் இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும், 5ஆம் இடத்தில் கேஎல் ராகுலும் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆல் ரவுண்டர்களாக நியூசிலாந்தின் கிளென் பிலீப்ஸ், ஆஃப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஒமர்ஸாய், ஆகியோருடன் நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னரும் இடம்பிடித்துள்ளார். மேற்கொண்டு இந்த அணியின் கேப்டனாகவும் மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.