விராட் கோலி செய்ததை கண்டு யாரும் ஆச்சரியப்படவில்லை - ரோஹித் சர்மா!
விராட் கோலி செய்ததைப் பார்த்து ஓய்வறையில் உள்ளவர்கள் பெரிதும் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் இதனை செய்து வருகிறார் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டாந்து. இதில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Trending
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 20 ரன்னிலும், ஷுப்மன் கில் 46 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். அதன்பின் 56 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 42.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரி அரையிறுதி சுற்று வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. இப்போட்டியில் சதமடித்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “விராட் கோலி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை விரும்புகிறார். அவர் அணிக்காக விளையாடி, தன்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்ய விரும்புவார், இன்று அவர் செய்தது அதுதான். இன்று அவர் செய்ததைப் பார்த்து ஓய்வறையில் உள்ளவர்கள் பெரிதும் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் இதனை செய்து வருகிறார்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியின் முதல் பந்து முதல் நாங்கள் ஆரம்பித்த விதம் சிறப்பாக இருந்ததாக நான் நினைக்கிறேன். எங்கள் பேட்டிங் வரிசையில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தை ஆதரிக்கவும், அந்த ரன்களைப் பெறவும் நாங்கள் விரும்பினோம். இப்போட்டியில் வெற்றிபெற்றதற்கான பெருமை மிடில் ஆர்டர் வீரர்களையே சாரும். அவர்கள் இந்த வடிவத்தில் நிறைய விளையாடியுள்ளனர், மேலும் அவர்களிடமிருந்து அணிக்கு என்ன தேவை என்பதை அவர்கள் அறிவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now