நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை - தொடர் தோல்வி குறித்து ரிஸ்வான்!
நாங்கள் வருத்தப்படுகிறோம், நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் இன்னும் கடினமாக உழைத்து மீண்டும் வருவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.அதேசமயம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 9ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாட இருந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக இப்போட்டி முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Trending
இந்நிலையில் தோடர் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான், “நாங்கள் சிறப்பாக செயல்பட்டு, எங்கள் நாட்டுக்கு முன்னால் சிறப்பாக செயல்பட விரும்பினோம். மேலும் எங்கள் மீதான எதிர்பார்ப்புகளும் மிக அதிகம். ஆனால் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை, அது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளலாம். கடந்த சில ஆட்டங்களில் நாங்கள் தவறுகளைச் செய்துள்ளோம்.
இவற்றிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன். நாங்கள் அடுத்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளோம். அங்கு நாங்கள் எங்களுடைய தவறுகளைத் திருத்திக்கொண்டு சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்புகிறோம். நாங்கள் அனைவரும் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். தேசத்திற்காக நாங்கள் அனைவரும் இங்கே இருக்கிறோம். பாகிஸ்தான் எங்கள் முன்னுரிமை, எங்களிடமிருந்து எதிர்பார்ப்பு மிக அதிகம்.
Also Read: Funding To Save Test Cricket
நாங்கள் வருத்தப்படுகிறோம், நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் இன்னும் கடினமாக உழைத்து மீண்டும் வருவோம் என்று நம்புகிறோம். இத்தொடரின் போது எங்கள் அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபகர் ஸமான், சைம் அயூப் ஆகியோர் காயத்தை சந்தித்தனர். ஆனால் அதனை ஒரு சாக்காக சொல்ல விரும்பவில்லை. ஆனால் இதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now