
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் இத்தொடருக்காக தீவிரமாக தயாராகியும் வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கு அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ரஹ்மனுல்லா குர்பாஸ், அஸ்மதுல்ல ஒமர்ஸாய், முகமது நபி, நவீன் உல் ஹக்போன்ற நட்சத்திர வீரர்களுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் நடப்பு டி20 உலககோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும் 625 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 91 போட்டிகளில் பங்கேற்று ஆயிரத்திற்கு அதிகமான ரன்களையும், 78 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.