
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீகரத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஐசிசி தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்திய அணி பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "அடுத்த போட்டி இன்னும் 48 மணி நேரம் கழித்து, அதே லெவன் அதே நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆடுகளம் சற்று சோர்வாகத் தெரிகிறது, இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும், எனவே பிளேயிங் லெவனில் மாற்றங்கள் தேவையில்லை. இப்போது வருன் சக்ரவர்த்தி இருக்கும் ஃபார்மில் அவரைத் தடுப்பது கடினம், அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார், அவரது நம்பிக்கை அதிகமாக உள்ளது.