
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியுள்ளார். இதில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதில் டெல்லியில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னருக்குக் காயம் ஏற்பட்டது. முதல் இன்னிங்ஸில் விளையாடிய வார்னர், 15 ரன்களில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். சிராஜ் வீசிய பந்து, வார்னரின் தலைக்கவசத்தில் பட்டது. பிறகு சிராஜின் மற்றொரு பந்து, முழங்கையைத் தாக்கியது. இதனால் மைதானத்திலேயே வார்னருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் ஆட்டமிழந்த பிறகு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தேர்ச்சி அடையாததால் 2ஆவது டெஸ்டிலிருந்து வார்னர் விலகினார். வார்னருக்குப் பதிலாக ஆஸி. அணியில் மாற்று வீரராக ரென்ஷா சேர்க்கப்பட்டார். 2ஆவது இன்னிங்ஸில் அவர் தான் பேட்டிங் செய்தார்.