Advertisement

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த மிட்செல் மார்ஷ்!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ், நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை நேற்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 10, 2023 • 20:16 PM
DC’s Mitchell Marsh gets married to Greta Mack!
DC’s Mitchell Marsh gets married to Greta Mack! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான போட்டியில் ஒவ்வொரு அணியும் தீவிரமாக விளையாடி வருகிறது. டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 போட்டியில் விளையாடி மூன்று போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. முதல் 2 போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் வீரர், 3ஆவது போட்டியில் அவர் விளையாடவில்லை. 

அவருக்குப் பதிலாக ரோவ்மன் பவல் அணியில் இடம் பெற்றார். மிட்செல் மார்ஷ் திருமணம் காரணமாக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார்.  கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி மிட்செல் மார்ஷ் மற்றும் கிரேட்டா மேக் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில், மிட்செல் மார்ஷ் தனது நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை நேற்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். 

Trending


இதையடுத்து, இவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மிட்செல் மார்ஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர்களது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு துறைச்சார்ந்தவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement
Advertisement