
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை தொடங்கும் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்து இந்தியா அணியும் பல பரிட்சை நடத்துகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி ஐந்து போட்டிகளில் விளையாடி 246 ரன்களை அடித்திருக்கிறார்.
இதேபோன்று சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதனால் 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பையில் வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு தற்போது கிடைத்திருப்பதாக ரசிகர்கள் நம்பி வருகின்றனர். எனினும் பலம் வாய்ந்த இங்கிலாந்தனையை விரித்தினால் மட்டுமே இந்தியாவுக்கு இறுதிப் போட்டி செல்ல முடியும்.
இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களுடன் பேசிய டிவில்லியர்ஸ், “இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இந்தியாவுக்கு இருக்கும். இதில் மட்டும் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் தான் மோதிக் கொள்வார்கள்.