WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
கடந்த சீசனில் கோப்பையை தவறவிட்ட மரிஸான் கேப் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம்.
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. இதில் கடந்த சீசனில் கோப்பையை நழுவ விட்டு இரண்டாம் இடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் விளையாடவுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த சீசனில் டெல்லி அணி விளையாடிய 8 லீக் போட்டிகளில் வெறும் இரண்டு தோல்விகளை மட்டுமே சந்தித்து வலிமைமிக்க அணிகளில் ஒன்றாக தகழ்ந்தது. இருப்பினும் இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவி கோப்பையை இழந்துள்ளதால், இந்த சீசனில் கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதன்படி மரிஸான் கேப் தலைமையில் களமிறங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலம், பவீனம், டாப் வீரர்கள் மற்றும் அணியின் அட்டவணையை ஆகியவற்றை இப்பதிவில் காண்போம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் பலம் & பலவீனம்
Trending
மரிஸான் கேப் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அதிரடி வீராங்கனைகள் நிறைந்துள்ளனர். அதிலும் அவர்கள் அதிரடியான ஆட்டத்தின் மூலம் கடந்த சீசனில் 6 வெற்றி, இரு தோல்வி என புள்ளிப்பட்டியளில் முதலிடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முடித்தது. இருப்பினும் அவர்களால் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்ல முடியாமல் போனது அந்த அணி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் நடப்பு சீசனில் தங்களது தவறுகளை திருத்தி மீண்டும் ஒரு முறை இறுதிப்போட்டிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்றதுபோல் அணியின் பேட்டிங்கில் இந்திய அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலிஸ் கேப்ஸி, மெக் லனிங், லௌரா ஹாரிஸ் ஆகியோர் உள்ளனர். ஆல் ரவுண்டர்களை எடுத்துக்கொண்டால் கேப் மரிஸான் கேப், அனபெல் சதர்லேண்ட், ஷிகா பாண்டே ஆகியோருடன் ஷஃபாலி வர்மாவும் ஒருசில ஓவர்களை வீசுவார் என்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சில் ஜெஸ் ஜோனசெனுடன் இந்திய வீராங்கனைகள் டைட்டாஸ் சாது, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி ஆகியோருடன் பூணம் யாதவும் இடம்பிடித்திருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. முந்தைய சீசனை விட இந்த சீசனில் டெல்லி அணியானவது வலிமைமிக்க அணியாக பார்க்கப்படுகிறது. இதனால் அந்த அணிக்கு பலவீனம் என்று கூற பெரிய காரணங்கள் ஏதும் இல்லை. இருப்பினும் அணியில் நிறைய ஆல் ரவுண்டர்கள் இருப்பதால் அவர்களை டெல்லி அணி எவ்வாறு பயன்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி
ஆலிஸ் கேப்ஸி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனசென், லாரா ஹாரிஸ், மரிஸான் கேப் (கேப்டன்), மெக் லானிங், மின்னு மணி, பூனம் யாதவ், ராதா யாதவ், ஷஃபாலி வர்மா, ஷிகா பாண்டே, சினேகா தீப்தி, தனியா பாட்டியா, டைட்டாஸ் சாது.
டாப் பேட்டர்கள்
- மெக் லானிங் - 9 இன்னிங்ஸ்களில் 345 ரன்கள்
- ஷெபாலி வர்மா - 9 இன்னிங்ஸ்களில் 252 ரன்கள்
- மரிசானே கப் - 9 இன்னிங்ஸ்களில் 177 ரன்கள்
- ஆலிஸ் கேப்சி - 9 இன்னிங்ஸ்களில் 159 ரன்கள்
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் - 9 இன்னிங்ஸ்களில் 126 ரன்கள்
டாப் பந்துவீச்சாளர்கள்
- ஷிகா பாண்டே - 9 இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்டுகள்
- மரிசானே கப் - 9 இன்னிங்ஸ்களில் 9 விக்கெட்டுகள்
- ஜெஸ் ஜோனாசென் - 9 இன்னிங்ஸ்களில் 9 விக்கெட்டுகள்
- தாரா நோரிஸ் - 5 இன்னிங்சில் 7 விக்கெட்டுகள்
- ஆலிஸ் கேப்ஸி - 8 இன்னிங்ஸ்களில் 6 விக்கெட்டுகள்
டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி அட்டவணை
- பிப்ரவரி 23: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
- பிப்ரவரி 26: யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
- பிப்ரவரி 29: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
- மார்ச் 3: குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
- மார்ச் 5: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
- மார்ச் 8: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ், அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
- மார்ச் 10: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
- மார்ச் 13: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
Win Big, Make Your Cricket Tales Now