
ரசிகர்களில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானது ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை 17 சீசன்களை வெற்றியுடன் கடந்துள்ள இத்தொடரானது அடுத்த ஐபிஎல்சீசனுக்காக தயாராகி வருகிறது. அந்தவகையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இத்தொடருக்கான வீரர்கள் மெகா எலாம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகமும் தங்கள் அணியில் பல்வேறு மாற்றங்களை செய்துவருகிறது. அதில் முதல் படியாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங்கை அணியில் இருந்து நீக்கியுள்ளது.
ரிக்கி பாண்டிங்கின் பயிற்சிக்கு கீழ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 2020ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியும், 2021ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதைத் தவிர்த்து மற்ற சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் லீக் சுற்றுடனே வெளியேறது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு சீசன்களிலும் மோசமான ஆட்டத்தின் காரணமாக அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்ததும் அவரது நீக்கத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கபடுகிறது.