பந்து வீசுவதற்கு நான் என்னை மனதளவில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன் - ரோஹித் சர்மா!
என்னால் முன்பு போல் பந்து வீச முடியாது. மேலும் வான்கடே மைதான ஆடுகளமும் எனக்கு பந்து வீச பெரிதான வாய்ப்புகளை தரவில்லை என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எல்லா அணிகளையும் அச்சுறுத்தக்கூடிய அணியாக இந்திய அணி இருந்து வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக, டி20 கிரிக்கெட்டின் தாக்கத்தின் காரணமாக, எல்லா அணிகளுமே அதிகப்படியான ஆல்ரவுண்டர்களை கொண்டு, பேட்டிங் நீளத்தை அதிகரிக்க முயற்சி செய்தன.
இதன் காரணமாக இப்படியான முயற்சிகள் ஈடுபட்ட எல்லா அணியின் பௌலிங் யூனிட்டும் பலவீனமாக மாறியது. மேலும் ஆல்ரவுண்டர்கள் என்பதால் அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை அதற்கேற்ற வகையில் விளையாடும் திறமை இல்லாதவர்களாகவும் இருந்தார்கள். இப்படியான ஒரு அணியை கொண்டு வந்து நடப்பு சாம்பியன் இங்கிலாந்து பெரிய அடி வாங்கியது. உலகக்கோப்பை தொடர் தொடங்கி சிறிது காலத்திலேயே மற்ற அணிகள் இதை புரிந்து கொள்ள ஆரம்பித்தன.
Trending
அதே சமயத்தில் இந்திய அணி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர்கள் என முயற்சி செய்தது. இதன் காரணமாகத்தான் இந்த இரண்டு அணிகளும் தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றன. தற்பொழுது ஐந்து முழுமையான பந்துவீச்சாளர்கள் இந்திய விளையாடும் அணியில் இடம் பெறுகிறார்கள். ஆறாவது பந்துவீச்சாளருக்கான இடம் யாருக்கு என்பது தற்பொழுது வரை ஒரு பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.
நேற்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் நால்வரும் பந்துவீசி இருந்தார்கள். இதில் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய அனுபவம் கொண்டவர். எனவே அவர் பந்து வீசுவதை இந்திய ரசிகர்கள் விரும்புகிறார்கள். தற்பொழுது அவர் மேற்கொண்டு இருக்கும் போட்டிகளில் இந்திய அணிக்கு பந்து வீசுவாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு ரோஹித் சர்மா நேரடியாகவே பதில் தந்து இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “நான் எனது பந்துவீச்சை தவற விடுகிறேன். என்னால் முன்பு போல் பந்து வீச முடியாது. மேலும் வான்கடே மைதான ஆடுகளமும் எனக்கு பந்து வீச பெரிதான வாய்ப்புகளை தரவில்லை. நான் இதிலிருந்து விலகி இருக்கப் போகிறேன். டெஸ்டில் நான் பந்து வீசுவேன். ஏனென்றால் அங்கு பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. எனவே அணிக்கு உதவ ஒரு போட்டியில் 10 ஓவர்கள் வீசுவதற்கு நான் என்னை மனதளவில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now