
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக். இந்திய அணிக்காக கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமான தினேஷ் கார்த்திக் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 17 அரைசதங்களுடன் மூன்றாயிரத்திற்கும் அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 22 அரைசதங்களுடன் 4,842 ரன்களைக் குவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து தொலைக்காட்சி வர்ணனையாளராகவும், அடுத்த ஆண்டு எஸ்ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளார். இந்நிலையில் அவர், இந்திய அணியின் தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி, தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக விரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார். மேற்கொண்டு மூன்றாம் வரிசையில் ராகுல் டிராவிட்டையும், நான்காம் இடத்தில் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ள அவர், ஐந்தாம் இடத்தில் விராட் கோலியையும், ஆறாம் இடத்தியில் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கையும் தேர்வுசெய்துள்ளார்.