
சமீபத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, இப்போது இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மீது தனது பார்வையை திருப்பியுள்ளது. இந்த தொடருக்கு முன், இந்திய அணி இன்னும் மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது, இதனால் இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஏதேனும் மாற்றம் வருமா இல்லையா என்பது ரசிகர்களின் மனதில் மிகப்பேரும் கேள்வியாக உள்ளது.
ஏனெனில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மான் கில் தொடக்க வீரராக களமிறங்குவாரா அல்லது, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா என்பதை ரசிகர்களின் மிகப்பெரும் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தனது பதிலை தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மான் கில் மட்டுமே தொடக்க வீரராக களமிறங்குவார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் மற்றும் ஷுப்மன் கில் கூட்டணி மிகவும் நன்றாக உள்ளது. அதேசமயம் ஜெய்ஸ்வாலுக்கு பேக்அப் ஓப்பனராக செயல்பட ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. மேலும் ஷுப்மான் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்றால், விரைவில் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும்.