
இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா பங்கேற்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 9-13, 17-21 மற்றும் மார்ச் 1-5, 9-13 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 18 பேர் இடம்பிடித்துள்ளனர்.
கேப்டனாக வழக்கம்போல் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் மிட்செல் ஸ்டார்க்கிற்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இவர் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, இந்த 4 டெஸ்ட் போட்டிகளில், முதல் இரண்டு டெஸ்ட்களில் இடம்பிடிக்கும் இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் இருவரும் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இத்தொடரில் இந்திய அணி 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றாக வேண்டும். கடந்த இரண்டுமுறை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதால், இம்முறை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடும் எனக் கருதப்படுகிறது.