ரோஹித், கோலிக்கு மாற்று இவர்கள் தான் - தினேஷ் கார்த்திக்!
தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள தினேஷ் கார்த்திக், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு மாற்று யார் என்பது குறித்து சூசகமாக பேசியுள்ளார்.
ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி போன்றவை நீண்ட காலத்திற்கு ஒருமுறை நடைபெறும் என்பதால், ஒரு ஐசிசி தொடர் முடிந்த உடனே சீனியர்களை கழற்றிவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் ஒரு அணியால் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியும். ஆகையால், ஷிகர் தவன், இஷாந்த் ஷர்மா போன்ற சீனியர்கள் சமீபத்தில் காரணமில்லாமல் கழற்றிவிடப்பட்டனர்.
இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்துள்ள நிலையில், அடுத்து 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகும் வகையில், இளம் வீரர்களை டெஸ்ட் அணிக்குள் கொண்டு வருவது நிச்சயம் அவசியமான ஒன்றாகும். ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா, ரஹானே போன்றவர்கள் அடுத்த இரண்டு வருடங்கள் முடிவுவரை விளையாடுவார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
Trending
ஆகையால், அவர்களுக்கு மாற்றாக இப்போதே இளம் வீரர்களை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது. புஜாராவுக்கு மாற்றாக ஹனுமா விஹாரி, ரஹானேவுக்கு மாற்றாக ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இருக்கிறார்கள். ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோருக்குத்தான் சரியான மாற்று வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இல்லை.
ஆகையால், வரும் ஜூலை 12ஆம் தேதிமுதல், வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு, இளம் வீரர்களை அதிகளவில் தேர்வுசெய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள தினேஷ் கார்த்திக், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு மாற்று யார் என்பது குறித்து சூசகமாக பேசியுள்ளார். அதில், “இந்திய டெஸ்ட் அணியில் யாஷஸ்வி ஜெய்ஷ்வால், சர்ஃப்ரஸ் கான் இருவருக்கும் நீண்ட கால வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார். அதாவது, ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்க கூடியவர். இவரும், கில்லும் ஓபனர்களாக இருந்தால் நன்றாக இருக்கும். சர்ஃப்ரஸ் கான் மிடில் வரிசையில் களமிறக்க கூடியவர். கோலியின் இடத்திற்கு சரியான மாற்றாக இருப்பார் என தினேஷ் கார்த்திக் குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now