
England Women ODI Squad: இங்கிலாந்து மகளிர் ஒருநாள் அணியில் சோஃபி எக்லெஸ்டோன் மற்றும் மையா பௌச்சர் உள்ளிட்டோருக்கு இடம் கிடைத்துள்ளது.
இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டில் இந்திய அணியும், ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜூலை 16ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இங்கிலாந்து மகளிர் ஒருநாள் அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.