கோலி, ரோஹித் டி20 கிரிக்கெட் அணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்- ரவி சாஸ்திரி!
சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் இருந்த இடங்களுக்கு ரோஹித் மற்றும் விராட் கோலி சரியானவர்கள் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நடைபெற்று வரும் 16ஆஅவது ஐபிஎல் சீசன் மூலம் இந்திய டி20 கிரிக்கெட் வேறொரு பரிணாமத்திற்கு மாற இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ரோஹித் சர்மா விராட் கோலி போன்ற இந்திய நட்சத்திர முன்னணி வீரர்கள் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இருந்து விலகி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டிய தேவை உருவாகி இருப்பதை இந்த ஐபிஎல் தொடர் காட்டுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவின் ரன் சராசரி மிக மோசமாக இருக்கிறது. அவரால் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. அவரிடமிருந்து அணி எதிர்பார்க்கும் பங்களிப்பை பேட்டிங்கில் அவரால் தர முடியவில்லை. இன்னொரு பக்கம் இந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 438 ரன்கள் குவித்து இருக்கும் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 131 தான் இருக்கிறது. இவர் மிடில் ஓவர்களில் ஸ்பின்னுக்கு எதிராக ரன் கொண்டுவர மிகவும் தடுமாறுகிறார்.
Trending
பவர் பிளேவில் விராட் கோலி வேகமாக ரன் கொண்டு வந்தாலும் பிறகு மிடில் ஓவர்களில் ஸ்பின்னில் தடுமாறுவதால் ரன் ரேட்டும் இவரது ஸ்ட்ரைக்ரேட்டும் விழுகிறது. இதுவும் அணியின் வெற்றியை பாதிக்கிறது. ஏனென்றால் மிடில் ஓவர்களில் ஒரு அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எப்படி செயல்படுகிறது என்பதுதான் போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.
தற்பொழுது இவர்கள் குறித்துப் பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் இருந்த இடங்களுக்கு ரோஹித் மற்றும் விராட் கோலி சரியானவர்கள். இதற்கு முன்னமே இவர்களுக்கு ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது.
ரோஹித் சர்மா விராட் கோலி தங்களை இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் விலக்கப்படுவார்கள். அது அடுத்த ஒரு வருடத்தில் நடக்கும். அந்த நேரத்தில் சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்பொழுது நிச்சயமாக அனுபவமும் மற்றும் உடல் தகுதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
விராட் கோலி ரோஹித் சர்மா ஏற்கனவே தங்களை நிரூபித்து விட்டவர்கள். அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்று ஏற்கனவே நமக்குத் தெரிந்ததுதான். இளம் வீரர்கள் வாய்ப்புகளைப் பெறவும், தங்களை நிரூபிப்பதற்கும் நான் இப்போதே அவர்களின் பக்கமாக தான் செல்வேன். இதனால் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புத்துணர்ச்சியாக விராட் கோலி ரோஹித் சர்மா இருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now