
Eng vs Ind, 4th Test: Umesh removes big fish Root as hosts trail by 138 runs (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்(11), ராகுல்(17) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் புஜாரா(4), ஜடேஜா(10) ஆகிய இருவரும் சொதப்பினர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த கேப்டன் கோலி, 50 ரன்னில் நடையை கட்ட, அவரைத்தொடர்ந்து ரஹானே 14 ரன்னிலும் ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பின்வரிசையில் இறங்கிய ஷர்துல் தாகூர் அடித்து ஆடி 31 பந்தில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் 36 பந்தில் 57 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, அதன்பின்னர் டெயிலெண்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு சுருண்டது.