ENG vs IND: நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் டௌசன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Shoaib Bashir Ruled Out: ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் சோயப் பஷீர் விலகியதன் காரணமாக லியாம் டௌசன் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதன்மூலம் இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இதிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் லியாம் டௌசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது ஷோயப் பஷீர் கேட்ச் பிடிக்கும் முயற்சியில் காயத்தை சந்தித்தார். மேலும் அவரது விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டதன் கரணமாக இத்தொட்ரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக சோயப் பஷீருக்கு மாற்றாக லியாம் டௌசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர் கடந்த 2017ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது மீண்டும் டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள டௌசன் பேட்டிங்கில் அரைசதம் உள்பட 84 ரன்களையும், பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
Liam Dawson has replaced Shoaib Bashir in England’s squad! pic.twitter.com/iXcbhrhjzt
— CRICKETNMORE (@cricketnmore) July 15, 2025
அதேசமயம் முதல் தர கிரிக்கெட்டில் 212 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 18 சதம் 56 அரைசதங்களுடன் 10731 ரன்களையும், பந்துவீச்சில் 371 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மேற்கொண்டு எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் முந்தைய போட்டியில் விளையாடிய வீரர்கள் அனைவரும் தங்களது இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, லியாம் டௌசன், பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா.
Win Big, Make Your Cricket Tales Now